தொடர் மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும்.. - சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது?

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைகிறது என்று நேற்று முன்தினம் (ஜூலை 18), டெல்லி அரசு மருத்துவமனை சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதை சட்டவிரோதக் காவல் என்று சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் குறிப்பிடுகிறார்கள். உடல்நிலையில் பிரச்னை இல்லையென்றாலும், மருத்துவமனையில் சட்டவிரோதமாக வைத்துள்ளனர் என்பதே இவர்களது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது...

அறிக்கை

"சோனம் வாங்சுக் தொடர்ந்து வி.எம்.எம்.சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பராமரிப்பைப் பெற்று வருகிறார். அவரது அத்தியாவசிய உடல் நலம் சார்ந்த அளவீடுகள் சீராக உள்ளன.

இருப்பினும், ரத்தத்தின் அளவீடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும், பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர மேற்பார்வையிலும் இருந்து வருகிறார்.

புது டெல்லியில் உள்ள வி.எம்.எம்.சி, சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுக்களின் மருத்துவப் பரிசோதனையின்படி, அவரது உடல்நிலையில் ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் நிர்வகிப்பதற்கு, தொடர்ச்சியான மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது.

அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பராமரிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் அவரது உடல்நிலை ஒரு பல்துறை நிபுணர் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. !

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.