நாடாளுமன்றத்தை நோக்கி CJP இளைஞர்கள் பேரணி : இணையதள சேவை துண்டிப்பு; காவல்துறை தடியடி
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
அவருடைய உடல்நலம் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் களத்தில் இறங்கி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடந்தி வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜுலை 20) தொடங்குவதை ஒட்டி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சலோ சன்சாத் என்ற பேரணியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் பேரணியை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தப் பேரணியால் நாடாளுமன்றத்தை சுற்றி இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


