72 National Awards: ராயன் முதல் அமரன் வரை! - 72-வது தேசிய விருதுகள் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தமிழில் ஆவணப்படத்துக்கான சிறந்த ஒலி வடிவமைப்பு ஹரிஹரசுதனுக்கு ப்ளு படத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து மெய்யழகன் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பு பிரிவில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமரன் படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் அமரன் படம் தட்டி சென்றிருக்கிறது. மேலும் சிறந்த இயக்குநருக்கான விருது ‘அமரன்’ படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது மகாராஜா படத்திற்காக அனல் அரசு பெற்றிருக்கிறார். சிறந்த நடிக்கருக்கான விருது பிரம்மயுகம் படத்துக்காக மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த நடிகைக்கான விருதை ஆர்டிகிள் 370 படத்துகாக நடிகை யாமி கெளதம் பெறுகிறார்.

சிறந்த துணை நடிகைக்கான விருது மகாராஜா படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த வசனத்துக்கான விருதை லக்கி பாஸ்கர் (தெலுங்கு) படத்திற்காக வெங்கி அட்லுரி பெறுகிறார்.
இயக்குநர் ஃபாசில் முகமதுவின் பெமினிச்சி பாத்திமா என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரன்தீப் ஹூடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


