தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்... - காவலர் தேர்வு தள்ளிவைப்புக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு தள்ளி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலினின் பதிவு...

"தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

காவலர்

இது, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாகத் திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டுமென்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.