ரசிகர்களின் பணத்தில் விழா எடுப்பதா? அஜித்தின் முடிவை ஆதரித்த கேப்டன் விஜயகாந்த்!

தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் பேசப்படும் ஒரு முக்கியமான நிகழ்வு 2002-ம் ஆண்டு நடைபெற்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமான ‘நட்சத்திர கலை விழா’ நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு அன்றைய நடிகர் சங்கத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டிருந்தது. ஆனால், அந்த விழாவில் நடிகர் அஜித் குமார் மட்டும் கலந்துகொள்ளவில்லை. இது அப்போது திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
பலரும் அஜித் ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அப்போது இது குறித்து பத்திரிகையாளர்கள் கேப்டன் விஜயகாந்த்திடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “நான் அஜித்தை அணுகினேன். அவர் சொன்ன ஒரு காரணம் மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. ரசிகர்கள் தங்களின் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நம் படம் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில், மீண்டும் அவர்களிடம் வசூல் செய்யும் வகையில் ஏன் இத்தகைய கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்?” என்று அஜித் கேட்டதாக விஜயகாந்த் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தயங்கிய அஜித், தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை காசோலையாக கேப்டனிடம் வழங்கியுள்ளார். “நாம் நடிகர்கள், நமக்கு விருப்பம் இருந்தால் நாமே பணம் கொடுக்கலாம், மக்களிடம் மீண்டும் வசூல் எதற்கு?” என்பதுதான் அஜித்தின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.
அஜித்தின் இந்த நேர்மையான அணுகுமுறை சிலருக்கு அதிருப்தியை அளித்தாலும், பலரது பாராட்டுகளையும் பெற்றது. நடிகர்கள் பலரும் மக்கள் நலனில் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என்று பலரும் அப்போது சிலாகித்துப் பேசினர். கேப்டன் விஜயகாந்த், அஜித்தின் இந்த முடிவை முழுமையாக மதித்து ஆதரித்தார். நேர்மையான கருத்துக்களை வெளிப்படுத்துவதில் அஜித் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு இந்த 2002-ம் ஆண்டு சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். இன்றும் பல ரசிகர்களால் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


