தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரெஸ்டோ பார் எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக இந்த வகை மதுபானக் கூடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் விக்னேஷ்

இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.