மாத ராசிபலன்
ஆடி மாத ராசிபலன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 17 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள் அதிர்ஷ்ட நாள்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள், பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன்
மேஷம் ராசி அன்பர்களே!
முன்னேற்றம் ஏற்படும் மாதம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், அவர்களால் பிற்பகுதியில் குடும்பத்தில் சில பிரச்னைகளும் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கில்லை. நிர்வாகத்தினரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். அலுவலக விஷயங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் விரோதம் ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பண விரயம் ஆகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது.
பெண்களுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. தோழிகள் அனுசரணை யாக இருப்பார்கள். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். புகுந்த வீட்டு உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும்.வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,22,28,29; ஆகஸ்ட் 2,4,6,8,9,16
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
சந்திராஷ்டமம் : 23 இரவு முதல் 24,25,26 காலை வரை
பரிகாரம்: வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை.
ரிஷபம் ராசி அன்பர்களே!
பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்களின் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட் டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கும் ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. இரவு நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுக்கும், ஊதிய உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.
தொழில் வியாபாரம் நன்றாகவே இருக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் அனுகூல மான பலன்கள் ஏற்படும்.
பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். புகுந்தவீட்டில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 21,24,29,31; ஆகஸ்ட் 1,3,7,9,13,14,17
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
சந்திராஷ்டமம் : 26 காலை முதல் 27,28 இரவு வரை
பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம், செவ்வாயன்று துர்கைக்கு எலுமிச்சை வழிபாடு
மிதுனம் ராசி அன்பர்களே!
தேவையான அளவுக்குப் பணவரவு இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் சந்தர்ப்பம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட் டும் கடன் வாங்கவேண்டாம். சகோதரர்களால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அள வில் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு. தெய்வப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.
பெண்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புகுந்தவீட்டு சொந்தங்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,20,23,27; ஆகஸ்ட் 19,23,28,30
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டமம் : 28 இரவு முதல் 29,30,31 காலை வரை
பரிகாரம்: நிழல் கிரகங்களான ராகு கேதுவுக்கு அர்ச்சனை, சனியன்று மாலையில் சனீஸ்வரருக்கு எள்தீபம், செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.
கடகம் ராசி அன்பர்களே!
மகிழ்ச்சிகரமான மாதம். பல வகைகளிலும் அனுகூலமான பலன்கள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப் பதற்கு உகந்த மாதம். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்வது சாதகமாக முடியும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.பழைய வாக னத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. பழைய கடன்களைத் திருப்பித் தருவதற் கான சந்தர்ப்பம் ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வுக்கும் ஊதிய உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.
வியாபாரம், தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
பெண்களுக்கு பிரச்னை எதுவும் இல்லாத மாதம். புகுந்த வீட்டினரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். உங்கள் ஆலோசனைகள் பெரிதும் பாராட்டு பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். சலுகைகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18,21,26,27,30; ஆகஸ்ட் 3,5,8,11,14,17
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
சந்திராஷ்டமம் : ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 1,2 மாலை வரை
பரிகாரம்: தினமும் காலையில் நீராடியதும் சூரியன் வழிபாடு, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை
சிம்மம் ராசி அன்பர்களே!
அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். மற்றபடி பிரச்னை எதுவும் இருக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஷேர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். ஆனால், வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பெரிதும் பாதிப்பு இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு தற்காலிக இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,20,22,25,28,31, ஆகஸ்ட் 1,5,9,11,13,16
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டமம் : 2 மாலை முதல் 3,4 இரவு வரை
பரிகாரம்: தினமும் காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம், ஞாயிறு ராகு காலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம், புதன்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம்.
கன்னி ராசி அன்பர்களே!
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.
பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் வந்தாலும், இருக்கும் இடம் தெரியாமல் போகும். சிலருக்கு உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,19,22,27,29,31; ஆகஸ்ட் 1,3,8,12,14,17
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
சந்திராஷ்டமம் : 4 இரவு முதல் 5,6 இரவு வரை
பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்
துலாம் ராசி அன்பர்களே!
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடி வரும். வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர்களிடையே கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஆனால், உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சுமுகமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,18,25,26,29; ஆகஸ்ட் 1,3,4,10,13,17
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
சந்திராஷ்டமம் :6 இரவு முதல் 7,8 இரவு வரை
பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபட்டு துவரை தானம், வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை, தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
விருச்சிகம் ராசி அன்பர்களே!
பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பப் பெண்கள் பல வகையிலும் ஒத்துழைப்பு தருவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் அவர்களால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாத முற்பகுதியில், நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வீடு கட்டவோ அல்லது விரிவுபடுத்தவோ தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
பணியாளர்களுக்கு பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு சலுகையுடன் கூடிய இடமாற்றம் உண்டு. மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். மாத ஆரம்பத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 19,24,30; ஆகஸ்ட் 1,4,6,12,15,17
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டமம் : ஜூலை 12 மாலை முதல் 13,14 இரவு வரை; ஆகஸ்ட் 8 இரவு முதல் 9,10,11 அதிகாலை வரை
பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு நெய்தீபம், திங்கள் மாலையில் சிவனுக்கு வில்வார்ச்சனை
தனுசு ராசி அன்பர்களே!
மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி மேலோங்கும். செயலாற்றல் மேம்படும். முயற்சிக்கேற்ப வாழ்வில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி ஆகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவியாக இருப்பர். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பொன், பொருள் சேரும். விருந்து விழா எனச் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்பு பெருகும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனாலும், அவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பாராமல் பணம் கிடைக்கும். அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சீராகும்.
அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
பெண்களுக்கு, கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,21,23,27,31; ஆகஸ்ட் 1,5,7,9,14
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டமம் : ஜூலை 14 இரவு முதல் 15,16 இரவு வரை ஆகஸ்ட் 11 அதிகாலை முதல் 12,13 காலை வரை
பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், தினமும் காலையில் நீராடியதும் சூரிய வழிபாடு, பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு நெய் விளக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.
மகரராசி அன்பர்களே!
எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் குடி கொள்ளும். குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பழுதான வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மாத முற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் சகோதர வகையில் அலைச்சலும் செலவுகளுமே மிஞ்சும். கணவன் - மனைவிக் கிடையே மாதப் பிற்பகுதியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி நிதியுதவி எளிதாக கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பொருளாதார வளம் மேம்படும். எதிரிகளின் இடையூறுகளை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 23,24,26,31; ஆகஸ்ட் 1,3,6,8,9,16
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
சந்திராஷ்டமம் : 16 இரவு முதல் 17,18,19 அதிகாலை வரை; ஆக 13 காலை முதல் 14, 15 பகல் வரை
பரிகாரம்: வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு, சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை, வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
கும்பம் ராசி அன்பர்களே!
தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, பிரசித்திப் பெற்ற வெளிமாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக முடியும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டிகள் குறையும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,26,27,29; ஆகஸ்ட் 2,6,9,11,13
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சந்திராஷ்டமம் : ஜூலை 19 அதிகாலை முதல் 20,21 பகல் வரை; ஆக 15 பகல் முதல் 16,17 இரவு வரை
பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வெள்ளிக்கிழமை லட்சுமி சன்னதியில் நெய்தீபம், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு.
மீன ராசி அன்பர்களே!
ஓரளவு முன்னேற்றம் தரும் மாதமாக அமையும்.. எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி, சாதகமாக முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்கு தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு சாதகமான பதில் வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம்.
பெண்களுக்கு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 17,20,24,28,30; ஆகஸ்ட் 1,6,9,11,13,16
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டமம் : 21 பகல் முதல் 22,23 இரவு வரை; ஆக 17 இரவு முதல்
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம், தினமும் காலையில் சூரிய நமஸ்காரம், ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


