சர்க்கார் படப்பிடிப்பில் சொன்னதை நினைத்து சிரித்தோம் - விஜய்யைத் தன் கணவருடன் சந்தித்த வரலட்சுமி
திரைபிரபலங்கள் தொடர்ந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதல்வரைச் சந்திருக்கிறார்.
இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருக்கும் அவர், "தளபதி! இந்தப் பதிவைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்தேன். ஆனால் ஏற்கனவே இதைப் பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்தேன். அதனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் 100 விதமான விஷயங்களைப் பேசலாம். ஆனால் நாளின் முடிவில்.. சி. ஜோசப் விஜய்தான் நம்முடைய முதலமைச்சர்... மேலும் அவர் இங்கே நிலைத்து நிற்கவே வந்திருக்கிறார். விமர்சிப்பது எளிது, ஆனால் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அபாரமான துணிச்சலும், மன உறுதியும், தமிழக மக்களின் அளவற்ற அன்பும் தேவை.
இந்த அதிகாரமிக்க பதவியை நாம் மதிப்போம். வார்த்தைகளை விட செயல்களே உரக்கப் பேசும். எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு காலம் உண்மையை உணர்த்தும். அதுவரை, அவர் என்ன சாதிக்கிறார் என்று பார்ப்பதற்குக் கொஞ்சம் பொறுமையையும், மரியாதையையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்துவோம்.
ஐ லவ் யூ சார்.. எப்பொழுதும் நான் ஒரு "விஜய் வெறியன்"தான், அது என்றும் மாறாது. எங்களைச் சந்தித்து, இவ்வளவு நேரம் எங்களுடன் செலவிட்டதற்கு மிக்க நன்றி. சர்க்கார் படப்பிடிப்புத் தளத்தில் நான் அவரிடம் சொன்னதை நினைத்து இப்போது சிரித்தோம். இதுதான் அவருடைய பயணம் என்று எனக்குத் தெரியும்..

எப்பொழுதும் அன்பானவர் மற்றும் எளிமையானவர். பெண்கள் நலன் சார்ந்த சில பிரச்னைகளைப் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படப் போகும் அற்புதமான மாற்றங்களைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் சார். உங்கள் தலைமையின் கீழ் தமிழக மக்கள் செழிக்கட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


