இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அட்லாண்டா கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. 55-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் மோர்கன் ரோஜர்ஸ் கொடுத்த கிராஸ் பந்தை கார்டன் கோலாக மாற்றி, தனது அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார். 85வது நிமிடம் வரை தோல்வியின் பிடியில் இருந்த அர்ஜென்டினாவை லியோனல் மெஸ்ஸி தனது அசாத்திய ஆட்டத்தால் மீட்டெடுத்தார். மெஸ்ஸி கொடுத்த பாஸை லாங் ஷாட் மூலம் என்சோ பெர்னாண்டஸ் கோலாக்கி ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

 

அடுத்த ஏழே நிமிடங்களில், மெஸ்ஸி மீண்டும் ஒரு கோலுக்கு வழிவகை செய்ய, அதை மார்டினெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றி அர்ஜென்டினாவின் வெற்றியை (2-1) உறுதி செய்தார். அர்ஜென்டினா வீரர் மெக் அலிஸ்டரின் இரண்டு முயற்சிகள் கோல் கம்பத்தில் பட்டு ஏமாற்றமளித்தன. இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்ஃபோர்டும் சில கோல்களைத் தடுத்தார். இந்தத் தொடரில் விளையாடிய 11 போட்டிகளிலும் மெஸ்ஸி கோல் அல்லது அசிஸ்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை மெஸ்ஸி எதிர்கொள்ளவுள்ளார்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.