அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நோக்கி வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தற்போது இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமாருக்கு தற்போது 35 வயது ஆவதாலும், அடுத்த டி20 உலகக்கோப்பை 2028-ல் நடைபெறவுள்ளதாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், பிசிசிஐ தரப்பில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு திரும்புவதற்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமானால், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டியது கட்டாயமாகும். உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் டக் அவுட் ஆனது மற்றும் ஐபிஎல் 2026 தொடரில் எதிர்பார்த்த அளவு ரன்களை எடுக்காதது அவரை அணியிலிருந்து நீக்க முக்கிய காரணங்களாக அமைந்தன.
மும்பை அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது பார்மை நிரூபித்தால் மட்டுமே, மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்ப முடியும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 36 வயதை நெருங்கும் சூர்யகுமார், தனது அனுபவத்தாலும் ஆட்டத்திறனாலும் மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


