தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியா இருக்கும், எழுதி வச்சுகோங்க - மாநாட்டில் அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி We The Leaders என்ற இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் .

அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநாடு நடைபெற்றது.

அண்ணாமலை

இந்த இயக்கத்தின் முதல் மாநாடாக அமைந்துள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய We The Leaders இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, " இது சாதரண நிகழ்வு அல்ல. இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களை பார்க்கும்போது எதற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினோமோ அதில் 50% தாண்டிவிட்டோம் என்று தன்னம்பிக்கை வந்துவிட்டது.

38 நாட்களில் 19 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றனர். நாம் யாரையும் கூப்பிடவில்லை. அவர்களே இணைகிறார்கள். இந்த அமைப்பைப் பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான்.

ஆகஸ்ட்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நடத்த இருக்கிறோம். 6 மாத காலம் மக்களின் 6 முக்கியமான பிரச்னைகளை பேசப்போகிறோம். அதற்கான இலக்கு நம்மிடம் தெளிவாக இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். எத்தனை ஆண்டுகள் இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை போதை பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும். 2026-ஐ போன்று 2031-லும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். இன்னொரு கட்சியை திட்டுவதற்கு தலைவர்களைக் குறைக் கூறுவதற்கான மாநாடு இது அல்ல. மூர்க்கமான அதிகார பசி எங்களுக்கு இல்லை.

இன்னும் நமக்கு 5 வருடங்கள் இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும், தொண்டர்களும் வர இருக்கிறார்கள். சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும். 2031-ல் we the leaders அமைப்பு ஆரோக்கியமான அரசியல் கட்சியாகத் தான் மாறப்போகிறது.

2026ல் 1.68 கோடி பேர் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் முதல்முறை அமைச்சர்கள். செங்கோட்டையனை தவிர. நிர்வாகம் புதிது. தடுமாற்றம் இருக்கும். அவர்களை கைத்தூக்கி விட தான் வேண்டும். அற்ப அரசியலுக்காக இந்த அமைப்பு இருக்காது. சரியான எண்ணிக்கையும் சரியான தலைவர்கள் வரும் போதும் கட்சியாக மாறும்.

அண்ணாமலை
அண்ணாமலை

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்க தான் போகிறார்கள். தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியாக இருக்கும். எழுதிவைத்து கொள்ளுங்கள். பாஜகவை திட்டவில்லை என்பதால் அண்ணாமலை பாஜகவின் பி டீமா? என்று திமுகவினர் விமர்சிக்கின்றனர்.

இறுமாப்புடன் சொல்கிறேன் நான் ஒரு தேசியவாதி. நான் ஒரு இந்து. அதை காட்ட வேண்டிய அவசியமில்லை. மதத்தை, சாதியை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வந்தாலே உண்மையான இந்துக்களுக்கு புரியும்

எதிர்காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மெய்யான சமூகநீதி, நிலையான வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். என் மண், என் மக்கள் தொழிற்சங்க அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். அதிலும் உங்களை இணைத்து கொள்ளுங்கள். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.