Anbe Diana: ``டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம் என்றார்கள்; ஆனால்... - பாரி இளவழகன்
ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து அன்பே டயானா என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.
அதில் நடிகரும், இயக்குநருமான பாரி இளவழகன் பேசியபோது, ``இயக்குநர்களுக்கெல்லாம் இதுபோன்ற விழாக்கள் ஒரு நன்றி அறிவிப்பு விழாதான். ரிட்டன், டைரக்டட் அண்ட் பர்பாம்டு பை (Written, Directed and Performed by) என்று போஸ்டரில் எளிதாகப் போட்டுவிடலாம். ஆனால், அது உண்மையாக மாறுவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.
இந்த மேடை என்னைப் போல சினிமாவில் கஷ்டப்பட்டு ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு, பெரிய மேடை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
என்னுடைய முதல் படமான ஜமா தியேட்டர்களில் பெரிய அளவில் போகாதபோதும், அதை ஓடிடியில் பார்த்துவிட்டு, "ஜமாவைத் தவறவிட்டுவிட்டோம், ஆனால் அன்பே டயானா படத்தைக் கண்டிப்பா தியேட்டரில் பார்ப்போம்" என்று அன்பைக் கொட்டும் தமிழ் ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாகவும், எனக்குக் கிடைத்த சின்ன முகவரிக்கும் காரணமான இசைஞானி இளையராஜா சாருக்கு என் முதல் நன்றி.

இந்தப் படத்திலும் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே செனோரிட்டா பாடலை வைத்துள்ளோம். "டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க, ஹீரோ வேற ஆளைப் போடலாம்" என்று பலரும் சொன்னபோது, என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இவ்வளவு பெரிய மேடையை யுவராஜ் ப்ரோ எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்.
என்னுடைய பெரம்பூர் நண்பர்கள், சென்னை புல்ஸ் மற்றும் கல்லூரி நண்பர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளை உற்றுநோக்கித்தான் நான் இந்தத் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.
டெரரான கதாபாத்திரங்களில் நடித்துப் பழகிய சேத்தன் சார், இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரில்லியன்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
போஸ்டரின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்கும் ரோஜா மேம், வக்கலங்கா சரளா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். பெங்களூர் பாபாவாக நடித்த கோபி பிரதரின் நடிப்பு திரையரங்குகளில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும்.
மேலும் சுதர்சன், இஸ்மத் பானு, குட்டி குழந்தை அதிதி மற்றும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் எந்தவிதச் சலிப்பும் இல்லாமல் திறம்பட நடித்த கதாநாயகி ரம்யா ரங்கநாதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
கடைசியாக, என் இனிய பெரம்பூர் மக்களுக்கு இந்த அன்பே டயானா என்றும் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும். உதவி செய்த தெலுங்கு குடும்பங்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் நண்பர்களுக்கு நன்றி. முதல் படத்தை தியேட்டரில் பார்க்காதவர்கள், இந்த முறை தியேட்டருக்கு வந்து இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நீங்கள் தரும் வெற்றி, என்னைப்போன்ற பல பாரிகளுக்கு, யுவராஜ் போன்ற தயாரிப்பாளர்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ஜூலை 17-ல் தியேட்டர்களில் சந்திப்போம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
