PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்
சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது.
இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...
> புதிய CITES திட்ட அமலாக்கத்தின் கீழ், EPFO இப்போது ஒரே தேசிய தரவுத்தளத்தின் கீழ் இயங்குகிறது. அதனால், இனி இ.பி.எஃப்.ஓ உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்திய அலுவலகத்திற்குச் சென்றுதான் சேவைகளைப் பெற வேண்டுமென்பதில்லை.
நாட்டில் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
> இனி உறுப்பினர்கள் கிளைம்க்கு விண்ணப்பிக்கும் போதே, தானியங்கி (Automated pre-validation) மூலம் விண்ணப்பம் சரிபார்க்கப்படும். இதனால், விண்ணப்பத்தில் ஏதேனும் குறைகளோ, முரண்பாடுகளோ இருந்தால் அவை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, உறுப்பினர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
இது கிளைம்கள் நிராகரிக்கப்படுவதை பெருமளவு குறைத்து, முதல் முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும் விகிதத்தை அதிகரிக்கும்.
மேலும், வெவ்வேறு வகையான தேவைகளுக்குத் பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்கத் தகுதி உள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு இது முன்கூட்டியே தெரியப்படுத்தும்.
> இனி இ.பி.எஃப்.ஓ உறுப்பினர் தளத்தில் (Member Portal) லாகின் செய்யும்போது, உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் விவரங்கள், பிஎஃப் பேலன்ஸ், கிளைம் ஸ்டேட்டஸ், பென்ஷன் சேவைப் பதிவுகள் மற்றும் பெற்ற பலன்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
இதற்கு முன்பு, ஒவ்வொரு தகவல்களுக்கும் ஒவ்வொரு வலைதளத்தைப் பார்க்க வேண்டியதாக இருந்தது.
> இப்போது அத்தியாவசியத் தேவைகள், வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் என மூன்று பிரிவுகளின் கீழ், எளிதாக பகுதிப் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த மூன்று பிரிவுகளின் கீழ், இனி மொத்த பி.எஃப் இருப்பில் 75% வரை பணமாக எடுக்க முடியும்.

> KYC மற்றும் சரிபார்ப்பு மூலம் ரூ.5 லட்சம் வரையிலான அட்வான்ஸ் கிளைம்கள் ஆட்டோ-செட்டில்மென்ட் செய்யப்படும். இது முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது.
> இதுவரை இறுதி பி.எஃப் செட்டில்மென்ட்களுக்கான வட்டி முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை மட்டுமே என்று கணக்கிடப்பட்டது. ஆனால், புதிய முறையின் கீழ், இனி பணம் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் தேதி (Date of Payment Authorisation) வரை கணக்கிடப்படும். இதன் மூலம் இடையில் உள்ள நாள்களுக்கான கூடுதல் வட்டியும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.
> ஒவ்வொரு வேலை மாறும் போது, தனியாக விண்ணப்பம் சமர்பித்து பி.எஃப் கணக்குகளை இணைக்க வேண்டிய சூழல் இதுவரை இருந்தது. ஆனால், இப்போது ஆதார் இணைக்கப்பட்ட UAN எண் கொண்ட பிஎஃப் கணக்குகள் உறுப்பினர்கள் வேலை மாறும்போது இனி தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும்.
> ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் இனி எந்தவொரு பி.எஃப் அலுவலகத்தையும் அணுகி சேவைகளைப் பெறலாம்... வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

> இனி கிளைமிற்கு விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆன்லைனிலேயே கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொள்ளலாம். இன்னும் தகவல் வேண்டுமானாலும், ஆன்லைனிலேயே பதில் அளிக்கப்படும்.
இது கிளைம் நடவடிக்கையை விரைவுப்படுத்துவது மட்டுமல்லாமல், இ.பி.எஃப்.ஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை குறைக்கும்... கிளைம் நிராகரிப்புகளையும் குறைக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

