திருச்சி: கஞ்சா அடிக்கப் போறீங்களா? - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!
திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை நாகராஜ், அவருடைய நண்பர் ஜெகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருவரும், `கஞ்சா அடிக்கப் போறீங்களா? எனக் கேட்டுள்ளனர்.
இதில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் அரிவாளை எடுத்துக்கொண்டு சென்று நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரை வெட்டியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த நாகராஜ் மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்கரை பகுதியில் கஞ்சா புகைப்பதை தட்டிக் கேட்ட பாலாஜி என்பவரை கஞ்சா கும்பல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த பாலாஜி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், கஞ்சா விவகாரத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த முகமது ஜஃப்ரான் (19) , ரோகித் ஜான் (22), மெல்வின் மோகன் (20), ரஞ்சிதபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாருக் கான் (20) ஆகிய நான்கு பேரை பொன்மலை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த மோதலின் போது ஷாருக் கான் என்பவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


