Kriti Sanon: நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்! - கீர்த்தி சனூன்
பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் தனது கருமுட்டைகளைச் சேமித்து வைத்திருப்பதாகச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் என் கருமுட்டைகளை உறையவைத்துள்ளேன். அதை மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திட்டமிட்டுச் செய்தேன்.
மீமி (Mimi) திரைப்படத்திற்காக நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்த அந்தச் சமயத்தில்தான் இந்தச் சிகிச்சையையும் மேற்கொண்டேன்.
பொதுவாக, கருமுட்டை சேமிப்புச் சிகிச்சையின் போது உடலில் கடுமையான வீக்கம் ஏற்படும். எப்படியும் மீமி படத்திற்காக நான் குண்டாகத்தான் வேண்டும் என்பதால், அந்த இரண்டு மாத ஷூட்டிங் பிரேக் இடைவெளியை இதற்குச் சரியான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
என் நெருங்கிய நண்பர் ஒருவர் தான், உனக்காக நீயே கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு இதுதான் என்று கூறி இந்த ஐடியாவைக் கொடுத்தார்.

ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த மாதிரியான உடல் உபாதைகளைச் சந்திப்பாரோ, அதே போன்ற ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வுதான் எனக்கும் இருந்தது. இருந்தாலும், இந்த முடிவை எடுத்ததில் எனக்கு முழு மன அமைதி கிடைத்துள்ளது.
என்னுடைய கரியரில் தேவையற்ற பதற்றமும் அழுத்தமும் என் மனதிற்குள் இருக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அதனால் தான் இந்த ஸ்மார்ட் பிளானிங்" எனக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


