வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்
கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் ஆனக்கம்பொயில் - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன.
மலப்புறம் மற்றும் வயநாடு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பல தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அஞ்சப்படுகிறது.
Keralam | Five people are injured after rubble from the #Wayanad-Kalladi tunnel construction site slides down due to heavy rains in the area. The injured are admitted to a local hospital. There is no casualty in the incident: Kerala State Disaster Management Authority (KSDMA) pic.twitter.com/eNAw29HJMe
— Utkarsh Singh (@utkarshs88) July 7, 2026
நிலச்சரிவு ஏற்பட்ட உடனே, கல்பற்றாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் இருந்தன. மேலும், அப்பகுதியில் சில வீடுகளும், தங்கும் விடுதிகளும் (Homestays) அமைந்துள்ளன.
விபத்து நடந்தவுடன் உள்ளூர் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரைப் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்துள்ள அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மேலும் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2024 ஜூலை மாதத்தில் வயநாட்டின் மேப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சூரல்மலா, முண்டக்கை போன்ற கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்தப் பேரழிவின் வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


