உண்மையான சூப்பர் ஹீரோக்கள் இதோ! அர்ஜுன் தாஸின் ‘சூப்பர் ஹீரோ’ (SUPERHERO) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தமிழ் திரையுலகின் தனித்துவமான குரல்வளம் மற்றும் ஆக்ஷன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘சூப்பர் ஹீரோ’ (SUPERHERO). இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு சுத்தமான குடும்பப் பொழுதுபோக்கு (Clean Commercial Family Entertainer) திரைப்படம் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகும் இப்படம், சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி (Soldiers Film Factory) மற்றும் ரிக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடன இயக்குனர் சாண்டி (Sandy) மற்றும் தேஜு அஸ்வினி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Soldiers Factory (@soldiersfactory)

அர்ஜுன் தாஸ் ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் என்பதால், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. சமூக வலைதளங்களில் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போதே வைரலாகி வருகிறது. போஸ்டரில் உள்ள மிரட்டலான தோற்றம் மற்றும் கேப்ஷன், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் அடுத்தகட்டமாக, ஜூலை 8-ம் தேதி ‘வேர்ல்ட் ஆஃப் சூப்பர் ஹீரோ’ (World of SUPERHERO) என்ற பெயரில் படத்தின் இரண்டாவது லுக் வெளியாக உள்ளது. ஒரு புதிய பரிமாணத்தில் அர்ஜுன் தாஸை இந்த சூப்பர் ஹீரோ படத்தில் காணலாம் என்று படக்குழுவினர் உறுதியளிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.