இந்தியாவில் இஸ்ரேலுக்கு எவ்வளவு பிரமாண்ட ஆதரவு இருக்கிறது தெரியுமா? - நெதன்யாகு என்ன சொல்கிறார்?

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இஸ்ரேலுக்கு அமெரிக்காவை தவிர சக்தி வாய்ந்த கூட்டாளி யாரும் இல்லை என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, Fox News செய்தி நிறுவனத்தின் பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "முதலாவதாக, நான் ஜே.டி. வான்ஸை மதிக்கிறேன்; எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது.

ஆனால், அதற்காக அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல.

அதே நேரத்தில், ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் - வெள்ளை மாளிகையில் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான். அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

ஜே.டி.வான்ஸ்

இரண்டாவதாக, நமக்கு வேறு சில நண்பர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, இந்தியா என்ற ஒரு சிறிய நாடு இருக்கிறது — உங்களுக்குத் தெரியும்.

அங்குக் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் வாழ்கிறார்கள். அங்கு நமக்கு எவ்வளவு பிரமாண்டமான ஆதரவு இருக்கிறது தெரியுமா?

நமக்கு எங்கெல்லாம் ஆதரவு இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏனென்றால், இப்போது பல நாடுகளின் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான, யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் பல நாட்டுத் தலைவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எங்கள் நாட்டில் பொதுமக்களின் கருத்து எங்களுக்கு எதிராக இருக்கிறது.

அதுதான் எங்களுக்குப் பிரச்னை. ஆனால், நாங்கள் உங்களை மதிக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் சில ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாமா? உங்கள் ராணுவம் பயன்படுத்தும் சில உத்திகளை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா?

நெதன்யாகு
நெதன்யாகு

உங்கள் நாட்டின் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை எங்களுக்கு வழங்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

உலகிலேயே சைபர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் இரண்டாவது இடத்தில் உள்ளது. நம்முடைய தொழில்நுட்பம் அந்த அளவிற்கு மிகச்சிறப்பானது.

எனவே, வெளியே தெரிவதைப் போல அல்ல நம்முடைய உறவுகள். நமக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.

அதோடு, நம்முடைய நண்பர்களை நாம் எப்போதும் நன்றாகப் பார்த்துக்கொள்வோம்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.