35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...
நியூஜெர்சியில் நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் அறிவித்துள்ளார்.
மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. பிரேசில் அணியின் இந்த தோல்வியைத் தொடர்ந்து, 34 வயதான நெய்மார் கண்ணீருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இப்போட்டியில் நார்வே அணியின் எர்லிங் ஹாலாண்ட் இரண்டு கோல்களை அடித்து அணியை காலிறுதிக்கு அழைத்து சென்றார். பிரேசில் தரப்பில் கூடுதல் நேரத்தில் நெய்மார் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார்.
1990-க்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். காயங்களால் அவதிப்பட்டு வந்த நெய்மார், பிரேசில் அணிக்காக அதிக கோல் (80 கோல்கள்) அடித்தவர் என்ற சாதனையை படைத்து, கால்பந்து ஜாம்பவான் பெலேயின் சாதனையை முறியடித்துள்ளார்.
பிரேசில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார். "நாங்கள் தொடர்ந்து எங்களது பணிகளைச் செய்வோம், புதிய யோசனைகளைத் தேடுவோம். இந்தத் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு புதிய சுழற்சியைத் தொடங்குவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


