திமுகவே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்தது; அந்த நட்பை நான் சிதைக்கவில்லை - திருமாவளவன்
நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா நடைபெற்றது.
அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது...
"திமுக கூட்டணியில் இருந்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அம்பேத்கரின் நூலை வெளியிட்ட போது நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பே எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒருபோதும் இடம் தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக தலைமைக்குத் தகவல் கொடுத்தேன்.
அமைச்சரவையில் நானே சேரலாம் என்று ரவிக்குமார் போன்றோர் சொன்னபோதும், 30 ஆண்டு காலம் உழைத்த தம்பி வன்னி அரசு போன்றவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று பெருந்தன்மையுடன் நடந்துகொண்டேன்.
முதலமைச்சரைச் சந்தித்தபோது, மதச்சார்பற்ற சக்திகளை அவர் அழைத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினேன்.
திமுக-வே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்ததே தவிர, நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை. அரசியல் வேறு, தனிநபர் நட்பு வேறு.
தமிழிசை, பொன்னார், அண்ணாமலை, அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்".
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


