Gatta Kusthi 2: எம்.பி.பி.எஸ்-ல் தேர்ச்சி பெறுவதற்காக இரவு பகலாக உழைத்தேன்! - ஐஸ்வர்யா லக்ஷ்மி
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, நடிப்பின் பக்கம் வந்தவர்.
இப்படத்திற்கான புரொமோஷனுக்காக அளித்த நேர்காணல் ஒன்றில் அவருக்கு எப்படி மருத்துவத் துறையிலிருந்து திரைத்துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "நான் ஒரு மருத்துவர்தான். என்னுடைய எம்.பி.பி.எஸ். (MBBS) படிப்பை நான் முழுமையாக முடித்துவிட்டேன்.
ஆனால், அதற்குப் பிறகு எனக்கு மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. மருத்துவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக நான் இரவு பகலாகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். மருத்துவராக இருப்பதை நான் உண்மையிலேயே நேசிக்கிறேன்.

ஆனால், நான் நடிகையானது முற்றிலும் எதிர்பாராத விதமாக நடந்தது. இதெல்லாம் கடவுளின் கணக்கு என்றுதான் நான் நம்புகிறேன்.
ஏனெனில், ஒரு மருத்துவராவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதற்குத் தகுதியைப் பெறக் குறைந்தது 8 ஆண்டுகளாவது நாம் உழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


