இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

விஜய் அவர்களின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சந்தீப் கிஷன் படத்தின் தரம் குறித்துப் பேசியுள்ளார்.
‘சிக்மா’ உருவான விதம் குறித்துப் பேசிய சந்தீப் கிஷன், “சிக்மா படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகியிருந்தால் இந்நேரம் நாட்டிலேயே அதிக வசூல் செய்த அறிமுக நடிகராக வரலாறு படைத்திருப்பார் என்றும், ஆனால் அவர் தனக்கான ஒரு மாற்றுப் பாதையைத் தேர்வு செய்து இயக்குநராக உருவெடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் பார்க்கும் வகையில் ஒரு ‘ஹாப்பி ஆக்ஷன்’ (Happy Action Film) திரைப்படமாக உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வரும் ஜூலை 31 அன்று திரைக்கு வரவிருக்கும் இப்படம், ஜேசன் சஞ்சய்யின் புதிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


