அன்று மாநிலக் கல்லூரித் தோழன்... இன்று எங்களைக் காக்கும் மருத்துவன்! - நட்பின் நன்றிக் காணிக்கை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"A friend in need is a friend indeed " என்று சொல்வதுண்டு. அந்த நண்பரே மருத்துவராக இருந்தால் இன்னும் சிறப்பு இல்லையா?

திரு . கண்ணபிரான் அவர்கள் மேற்கு மாம்பலம் லஷ்மி மருத்துவமனையில் மருத்துவ சேவை புரிகிறார். எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவமனை.

அவர் சாப்பாடு , தன் நலம் பற்றி எப்போதும் நினைப்பதே இல்லை.

மாநிலக் கல்லூரியில் 70 _ 73 கெமிஸ்ட்ரி பாட்ச்சில் படித்த எங்கள் அத்தனை பேருடனும் தொடர்பில் உள்ளார். சின்னதும் பெரியதுமாக

பல பல சந்தேகங்களை நாங்கள் அனைவருமே கேட்பதுண்டு . அவ்வப்போது சின்ன சின்ன மருத்துவ ஆலோசனைகளும் அவர் சொல்வதுண்டு.

மும்பையில் என் மகளுடன் இருக்கும் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தீபாவளி சமயத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் மகளும் மருமகனும் சுற்றத்தாருடன் சுற்றுலா சென்று விட்டார்கள். நான்கு நாட்கள் கழித்து தான் வருவார்கள் என்றிருக்கும் போது என் கணவருக்கு வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி ஏற்பட்டது.

ஒருவரும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனேன். நாங்கள் பார்க்கும் மருத்துவருமே தீபாவளி நேரம் என்பதால் வெளியே சென்றிருந்தார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கவும் யோசனையாக இருந்தது. தெரியாத மருத்துவர் மற்றும் சிகிச்சை பற்றி சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது! மொழிப் பிரச்சினை வேறு.

மகளோ , மருமகனோ அருகில் இருந்தால் அவர்கள் வழி காட்டக் கூடும்.எதுவானாலும் அவர்கள் வந்த பிறகு தான் பார்க்க வேண்டும் என்றுதான் தோன்றியது.

உடனே என்னுடைய நண்பரும் மருத்துவருமான டாக்டர் கண்ணபிரான் அவர்களைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். அவர் உடனே வலி அறிகுறிகளை முழுவதும் கேட்டு விட்டு சில மருந்துகளை மெசேஜ் செய்தார். பக்கத்திலிருந்த மருந்துக் கடையில் போய் வாங்கி வந்தேன்.

வலி குறைந்தாலும் கண்டிப்பாக மருத்துவரைப் பார்க்க அட்வைஸ் செய்தார். மருத்துவரிடம் மூன்று நாட்கள் கழித்து மருமகனுடன் போய் பார்த்தபோது அவர் சரியான மருந்துகள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.கஷ்டமானநேரத்தில் எனக்கு கை கொடுத்த டாக்டர் அவர்களை என்னால் மறக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் விகடன் மூலமாக நினைவு கொள்வதுடன் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.