இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

‘ஆவேசம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 47’ என்று அழைக்கப்படுகிறது. ‘சிங்கம்’ படத்திற்குப் பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜித்து, “நாங்கள் இன்னும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்கு எப்படி முன்வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை. அதனால்தான், படத்தின் டைட்டிலையோ அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டரையோ இன்னும் வெளியிடவில்லை. சரியான நேரம் வரும்போது இது குறித்துப் பேசுவதே சிறந்தது,” என்று கூறியுள்ளார்.

சூர்யாவை போலீஸ் கதாபாத்திரத்தில் காட்டுவது பெரிய அழுத்தத்தை உருவாக்குகிறதா என்ற கேள்விக்கு, “சூர்யா சாரைப் போலீஸ் வேடத்தில் இயக்குவதில் எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. எனது படக்குழுவும் இந்த விஷயத்தில் மிகவும் நிம்மதியாகவே இருக்கிறோம். நாங்கள் கதையின் மீது முழு நம்பிக்கை வைத்துப் பணியாற்றுகிறோம்,” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சூர்யா, நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு, ‘ஆவேசம்’ புகழ் சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இது சுஷின் ஷியாமின் முதல் நேரடி தமிழ்ப் படமாகும். ஒரு தீவிரமான குற்றப் புலனாய்வு (Serious crime hunt) மற்றும் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான ‘ழகரம்’ (Zhagaram) தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவிலான எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.