தமிழகத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!!

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக (CDS) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய CDS ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் மே 30, 2026-ல் முடிவடைவதை அடுத்து இவர் பொறுப்பேற்பார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் CDS பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.


1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் கமிஷன் பெற்று ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர். NDA, IMA-ல் பயின்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் http://M.Phil மற்றும் லண்டன், டெல்லியில் உயர்கல்வி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) முன்னாள் மாணவரான இவர் PVSM, AVSM, SM, VSM ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


மத்திய கட்டளைப் பிரிவின் GOC-in-C, ராணுவ துணைத் தளபதி ஆகிய முக்கிய பதவிகளை வகித்த இவர், தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக உள்ளார். CDS ஆக பதவியேற்ற பின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.