மே மாசம் அதிக கார் சேல்ஸ் நாங்கதான்!.. அசத்தும் TATA மோட்டார் நிறுவனம்!..

tata car


இந்தியாவில் முக்கிய மோட்டார் நிறுவனமாக டாடா திகழ்கிறது. கார்கள், மின்சார வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் என பலவற்றையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

பல வருடங்களாகவே மோட்டார் வியாபாரத்தில் இந்த நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.
நவீன வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தொழில்நுட்பத்தோடு கூடிய மோட்டார் வாகனங்களை டாடா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதனால்தான் எல்லா துறையில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் டாடா நிறுவனத்தின் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் விற்பனையான EV கார்களில் 10,377 கார்களுடன் டாடா நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. PUNCH EV, NEXON EV, HARRIER EV, CURVV EV ஆகிய மாடல் கார்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஒருபக்கம், டாட்டா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை வருகிற ஜூலை மாதம் 1ம் தெதி முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக சமீபத்தில் அறிவித்தது. உற்பத்தி செலவு மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என சொல்லப்பட்டடிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.