சென்னையில் 4 நாளில் 4000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று  தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து நுகர்வோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று வாரத்தின் முதல் நாளிலேயே கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது.

 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 210 உயர்ந்து ரூ. 14,070 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ. 1,12,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்  ஒரு சவரன் தங்கம் ரூ.  108,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 15,349 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 1,22,792 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 11 அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,08,000 என்ற அளவில் இந்த வாரத்தின் மிகக் குறைந்த விலையைப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

 

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 உயர்ந்து ரூ. 280 ஆகவும், ஒரு கிலோ ரெடி வெள்ளியின் விலை ரூ. 2,80,000 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாகவே இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.