ஜூலை 1ம் தேதி முதல் உயரும் டாட்டா மோட்டார்ஸ் வாகனங்கள்!...
இந்தியாவின் மிகப்பெரிய பன்முக வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களை உற்பத்தி செய்கிறது. பல வருடங்களாக மோட்டார் வியாபாரத்தில் டாடா நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. அதிநவீன வடிவமைப்பு, அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில் தொழிநுட்பத்திற்கு இந்நிறுவனம் பெயர் போனது.
மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது குறைவான விலையில் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்திற்கு சிறிய காரை அறிமுகப்படுத்தியது டாடா நிறுவனம்தான்.
இந்நிலையில், தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஜூலை 1 முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்திருக்கிறது.
உற்பத்தி செலவு மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வர்த்தக வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்த்தப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.