60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..


தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களின் ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒருவர். துவக்கம் முதலே சண்டை காட்சி அதிகம் உள்ள படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாகவே மாறினார் அர்ஜுன்.
பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரே சொந்தமாக படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார்,.

அப்படி உருவான சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன. ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன் முதல் ஆகிய படங்களிலும் அர்ஜுன் நடித்திருந்தார். சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் சூப்பர் ஹிட் வசூல் அடித்து 80 கோடி வசூலை தாண்டி விட்டது. அந்த படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணமே சண்டைக் காட்சிகள்தான்.

60 வயதிலும் அர்ஜுன் ஃபிட்டாக இருக்கிறார் இந்நிலையில் ஊடகம் ஒன்றில் தனது இளமையின் ரகசியம் பற்றி பேசிய அர்ஜுன் ‘ தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து உங்கள் உடம்பை நீங்க பாத்துக்கிட்டா அடுத்த 23 மணி நேரம் உடம்பு உங்களை பார்த்துக்கும். 60 வயசுக்கு மேல நான் ஃபிட்டா இருக்கேன். கொஞ்சம் சாப்பிட்டாலும் நல்லதா சாப்பிடுங்க.. வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க’ என அறிவுரை சொல்லியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.