குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...


பல குழந்தைகளுக்கும் இந்த சொத்தைப் பல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு தீர்வு என்னவென பார்ப்போ!ம்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரும் சொத்தைப் பல் (Dental Caries) என்பது பாக்டீரியாக்களால் ஏற்படும் பல் சிதைவு என சொல்லப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளுகு இந்த சிதைவு அதிகம் ஏற்படுகிறது. இதை துவக்கத்திலேயே கண்டுபிடித்து சரி செய்து குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நிரந்தர பற்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

துவக்க அறிகுறிகள்:

பற்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்..

பற்களின் நிறம் மாறும்.. பெரும்பாலும் கருமையான நிறத்திற்குக் மாறும்.

ஈறுகளில் விக்கம் அல்லது வலி ஏற்படும்.

இவை ஏற்பட்டாலே உடனே பல் மருத்துவரை அணுக வேண்டும்.

காரணங்கள்:

சர்க்கை நிறைய இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கேட்டுகளை சாப்பிடுவது..

பால் குடித்தபடியே தூங்கும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும்.

உணவு உண்டபின் வாயை கொப்பளிக்காமல் தூங்க செல்வது..

தடுப்பது எப்படி?:

குழந்தைகள் ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க கற்றுக்கொடுக்க வேண்டும்..

3 வயது வரை அரிசி அளவு ஃப்ளோரைடு உள்ள பேஸ்ட்டையும், அதன்பின் 6 வயது வரை அதே பேஸ்ட்டை பட்டாணி அளவு வரை பயன்படுத்தலாம்.

குழந்தைகள் தூங்க செல்லும் முன் பால் அல்லது இனிப்பு பண்டங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 
அதேபோல், விலை மிகவும் குறைந்த மிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கக் கூடாது..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.