நாகை: பள்ளி மாணவி தற்கொலை முயற்சி... இளைஞர் போக்சோவில் கைது!

வேதாரண்யம் அருகே, இளைஞரொருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி 10ம் வகுப்பு பள்ளி  மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து செங்கல்சூலை தொழிலாளியான அந்த இளைஞரை, மகளிர் காவல்துறை போக்சோவில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த அருள்கண்ணன் என்பவரின் மகன், அந்தோணிராஜ். இவர் செங்கல்சூலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நாகையில் 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியொருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

image

இந்நிலையில் நேற்று அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த மாணவியை, அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். பின் அவரிடம் விசாரித்ததில், காதல் விவகாரம் பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து, மாணவியின் பெற்றோர் அந்தோணிராஜ் மீது புகார் செய்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவந்த அந்தோணிராஜை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.