ஏலத்தில் விலைபோகாத வீரரை ரூ.2 கோடிக்கு எடுத்த சன்ரைசர்ஸ் அணி.. நாளை விளையாடுவாரா?

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த டேவிட் பெய்ன், கணுக்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸீயை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2 கோடி ரூபாய் மதிப்பிற்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்ட கோட்ஸீ, இதுவரை 14 ஐபிஎல் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2026 ஐபிஎல் ஏலத்தில் அவர் விற்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். 

 

மேலும், அந்த அணியின் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளது ஹைதராபாத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது இஷான் கிஷன் தலைமையில் விளையாடி வரும் ஹைதராபாத் அணி, 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹைதராபாத் இன்று எதிர்கொள்கிறது. புதிய வீரர் கோட்ஸீயின் வருகை அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.