இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. இன்று ஆர்சிபி செய்யவிருக்கும் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்..!

 

ஐபிஎல் 2026 தொடரின் 26-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வரலாற்று சாதனையை படைக்கவுள்ளது. 

 

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி, அந்த மைதானத்தில் ஆர்சிபி விளையாடும் 100-வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே மைதானத்தில் 100 போட்டிகளை விளையாடிய முதல் அணி என்ற பெருமையை ஆர்சிபி பெறுகிறது.

 

இந்த பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஈடன் கார்டன்ஸ் - 98 போட்டிகள்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (வான்கடே - 95 போட்டிகள்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

 

நடப்பு சாம்பியனான ஆர்சிபி, இந்தத் தொடரில் மிகச்சிறப்பான ஃபார்மில் உள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அந்த அணி, தனது 100-வது ஹோம் கிரவுண்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்து முதலிடத்திற்கு முன்னேறத் துடிக்கிறது.

 

மறுபுறம், 4 போட்டிகளில் தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பலமான ஆர்சிபியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்த போராடும். விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் போன்ற வீரர்கள் அதிரடி காட்டி வரும் நிலையில், சின்னசாமி மைதானத்தின் இந்த மைல்கல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.