விராத் கோலி, ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவார்களா? முன்னாள் வீரரின் முக்கிய கருத்து..!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் தேசப்பற்றை பாராட்டி, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவதையே இவர்கள் முதன்மையான இலக்காக கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்காக இவர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய நேர்காணலில் பேசிய முனாஃப் படேல், "விராட் மற்றும் ரோஹித் எப்போதும் நாட்டிற்கே முன்னுரிமை அளிப்பார்கள். தேவைப்பட்டால் அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து கூட விலகிக்கொள்வார்கள், ஆனால் இந்திய அணியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

 

தற்போது ஐபிஎல் 2026 தொடரில் கோலி ஆர்சிபி அணிக்காகவும், ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். கோலி காயத்தையும் மீறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ரோஹித் தசைநார் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

ஐபிஎல் போன்ற வணிக ரீதியான தொடர்களை விட, இந்திய முத்திரையுடன் விளையாடுவதே இவர்களுக்குப் பெருமை என்பதை முனாஃப் படேலின் இந்த கருத்து உறுதிப்படுத்துகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.