சிஎஸ்கே அதிரடி வெற்றி: சொந்த மண்ணில் கேகேஆர் அணியை வீழ்த்தியது சென்னை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 22-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. 

 

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஏமாற்றினாலும், சஞ்சு சாம்சன் (48 ரன்கள்) மற்றும் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே (17 பந்துகளில் 38 ரன்கள்) அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். டெவால்ட் பிரெவிஸ் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேகேஆர் தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியால், சிஎஸ்கே-வின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. ரகுவன்ஷி மற்றும் ரகானே ஓரளவு போராடினாலும், நடுவரிசையில் நூர் அகமதுவின் சுழலில் சிக்கி கேகேஆர் விக்கெட்டுகளை இழந்தது. 

 

நூர் அகமது 4 ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். கேகேஆர் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.