தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும் - பியூஷ் கோயல்!!

கோவையில் தொழில் துறை அமைப்பினர், இளம் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஒருங்கிணைந்த இந்தியாவின் வளர்ச்சியை பிரதமர் மோடி முன்னெடுக்கிறார் என்றார். கோவையை தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமாக கருதுவதாக கூறினார்.


பொறியியல், ஜவுளித் துறையில் கோவையின் பாரம்பரிய பலத்துடன், பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய தலைமுறை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இணைந்து நகரை வளர்த்து வருவதாக கூறினார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழில் விரிவாக்கத்துக்கு பயன்படும்வகையில் 9 வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


23-ம் தேதி நடைபெறும் தேர்தலில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வளர்ச்சிக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும் என்றார் பியூஷ் கோயல்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.