45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களம் காண தயாராகி வரும் நிலையில், அவரது வயது மற்றும் ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
வரும் ஜூலை மாதம் 45 வயதை எட்டவுள்ள தோனி, கடந்த 2025 சீசனில் 196 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 40 வயதை கடந்த பிறகு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, நேரடியாக ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் விளையாடுவது தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடைசி 10-12 பந்துகளை மட்டும் எதிர்கொள்வதும், 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்வதும் இந்த வயதில் கடினமான காரியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சிஎஸ்கே, இந்த முறை சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களை அணியில் இணைத்து டாட்ஸ் ஆர்மி என்ற பெயரிலிருந்து மாற முயன்று வருகிறது. இருப்பினும், தோனியின் அனுபவம் அணிக்கு தேவை என்றாலும், களத்தில் அவரது பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.