ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

இன்று முதல் ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இருக்கும் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, காலின் தசைப்பிடிப்பு காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். 

 

இதன் காரணமாக, அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வார போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே 44 வயதை கடந்த தோனி, தனது உடற்தகுதியை பேணுவதில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், இந்த காயம் அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 

கடந்த சீசனில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றிய தோனி, விரைவில் குணமடைந்து மைதானத்திற்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் Get Well Soon Thala என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

தோனி இல்லாத தொடக்க ஆட்டங்களில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபினிஷர் பொறுப்பை யார் கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Edited by Siva

Official Statement

MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain. As a result, he is likely to miss the first two weeks of TATA IPL 2026.

Get well soon, Thala! ???????? pic.twitter.com/4dgmt5EWFi

— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.