இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, மார்ச் 27ஆம் தேதியான இன்று தனது 15-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

 

2011-ல் பிறந்த இவர், தற்போது 15 வயதை எட்டியுள்ளதால் ஐசிசி விதிகளின்படி சர்வதேச சீனியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளார். மனநிலை மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு, சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக ஒரு வீரருக்கு குறைந்தபட்சம் 15 வயது இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

 

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், மிக இளம் வயதில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். 18 டி20 போட்டிகளில் விளையாடி 701 ரன்களை குவித்துள்ள இவர், 41.23 சராசரியுடன் மூன்று சதங்களையும் அடித்துள்ளார். 

 

இந்தியா U19 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பையிலும் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது ஆக்ரோஷமான பேட்டிங் முறை காரணமாக, விரைவில் இந்திய சீனியர் அணியில் இவருக்கு இடம் கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இவர் இன்னும் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.