என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..
லண்டனில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐபிஎல் மற்றும் இந்திய உரிமையாளர்கள் நடத்தும் வெளிநாட்டு லீக் அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது எக்ஸ் தளத்தில், "ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது பாகிஸ்தான் வீரர் மீது 2.34 கோடி முதலீடு செய்வதா? சாம்ராஜ்யங்களை உருவாக்குவது குறித்து எனக்கு தெரியும், என்னை தொடர்பு கொள்ளுங்கள்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இந்திய உரிமையாளர்கள் பொதுவாக பின்பற்றும் நடைமுறையை சன்ரைசர்ஸ் மீறியுள்ளது, சமூக வலைதளங்களில் அந்த அணியின் பக்கம் தற்காலிகமாக முடக்கப்படும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.