ராஜ வாழ்க்கை தரும் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
கஷ்டங்களை தீர்க்கக் கூடிய நானாக தான் சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்போம். இருப்பினும் இதே சங்கடஹர சதுர்த்தியின் நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நாம் வாழக்கூடிய வாழ்க்கையை ராஜாவிற்கு இணையான வாழ்க்கையாக மாற்றும். இதற்கு முக்கியமான காரணம் சங்கடகர சதுர்த்தி வரக்கூடிய கிழமை தான். இந்த முறை சங்கடஹர சதுர்த்தி என்பது புதன்கிழமை வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புதன்கிழமை நாம் விநாயகப் பெருமானை முறையாக வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ராஜ வாழ்க்கை தரும் சதுர்த்தி வழிபாடு
இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு செய்ய வேண்டும். நம் அனைவரின் வீட்டிலும் விநாயகரின் சிலை அல்லது படம் இருக்கும். சிலை இருக்கும் பட்சத்தில் அந்த சிலையை சுத்தம் செய்து சிலைக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். படம் இருக்கும் பட்சத்தில் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானின் வயிற்றில் கெட்டியாக சந்தனத்தை குழைத்து வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்ட வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு முன்பாக சாதாரண மண் அகல் விளக்கு அல்லது பஞ்சகவ்ய விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். எருக்கு திதி கிடைக்கும் பட்சத்தில் அதையும் பயன்படுத்தலாம்.
இந்த சங்கடஹர சதுர்த்தி என்பது புதன்கிழமையோடு சேர்ந்து வருவதால் புதன் பகவானுக்குரிய பொருளான பச்சைப் பயிரை சுண்டலாக தயார் செய்து விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு தங்களுக்கு தெரிந்த விநாயகரின் மந்திரத்தை கூறி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகர் அகவலை பாராயணம் செய்வது கூடுதல் சிறப்பை தரும். “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை நாள் முழுவதும் மனதிற்குள் கூறிக் கொண்டே வரவேண்டும்.
இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று எப்பொழுது சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறும் என்பதை கேட்டு பூஜைக்கு அபிஷேகத்திற்கும் தேவையான பொருட்களை வாங்கித் தர வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நிறைவடைந்த மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி விநாயகரின் வயிற்றில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அந்த நாணயத்தை எதற்காகவும் செலவு செய்யக்கூடாது.
இதையும் படிக்கலாமே: சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
இந்த முறையில் சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விநாயகரின் அருளோடு புதன் பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post ராஜ வாழ்க்கை தரும் சங்கடகர சதுர்த்தி வழிபாடு appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.