9-9-2025 இன்று 999 பிரபஞ்ச வசிய நாளில் பணம் தரும் பரிகாரம்
எதை வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கின்றோமோ, அது நம்மோடு நெருங்கி வருகிறது. எது வேண்டும் என்று நெருங்கி செல்கின்றோமோ, அது நம்மை விட்டு விலகி செல்கின்றது. ஆமாங்க. கஷ்டம் வறுமையை வேண்டாம் என்று ஒட்டிக்கு ஒதுக்கி வைப்போம். ஆனால் அந்த கஷ்டம் நம்மோடு வந்து ஒட்டிக் கொள்கிறது.
பணத்தை வேண்டும் வேண்டும் என்று நினைத்து நெருங்கி நெருங்கி செல்வோம். ஆனால் அந்த பணம் நம்மோடு நெருங்குவதே இல்லை. இந்த பணத்திற்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளியை குறைத்து, நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கு ஒரு வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். அதுதான் இந்த பிரபஞ்ச வசிய நாள்.
அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச வசிய நாளில், இந்த தேவதை ஆகர்ஷன நாளில் பணத்தை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவல் இந்த பதிவில் உங்களுக்காக. 999 இணைந்து இந்த 9-9-2025 தேதியில் வந்திருக்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம், பணத்திற்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளியை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
999 பண வசிய பரிகாரம்
ஒன்றுமே இல்லைங்க. மிக மிக எளிமையான பரிகாரம் இது. ஒன்பது, ஒரு ரூபாய் நாணயங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அதை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயங்களுடன் ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்திடம் “எனக்கு நிறைய பணம் கிடைக்க வேண்டும். மேலும் மேலும் செல்வ வளத்தில் நான் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். என்று வேண்டிக் கொள்ளுங்கள். தேவதை நாளான இன்று, அந்த மகாலட்சுமி யின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதலை ஒன்பது முறை பிரபஞ்சத்திடம் சொல்லலாம்.
கையில் இருக்கும் நாணயத்தை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு 9 முறை “தனம் பணம் தினம் தினம்” என்ற இந்த மந்திரத்தையும், இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் 9 முறை சொல்லி முடித்து விடுங்கள். வேண்டுதலை மன நிறைவோடு செய்துவிட்டு, நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒன்பது நாள் கழித்து இந்த முடிச்சு கொண்டு போய் குலதெய்வ கோவில் உண்டியலில் செலுத்துவது சிறப்பு.
குலதெய்வ கோவில் தூரமாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த முடிச்சை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விடுங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் கூடிய விரைவில் பலிக்கும். பேராசை கூடாது தற்போது உங்கள் வாழ்க்கையில் என்ன பண பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை வைத்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: நாளை 10-09-2025 புதன்கிழமை சங்கடஹர வழிபாடு.
முழுமனதுடன் நம்பிக்கையோடு இன்று இந்த வேண்டுதலை வைப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றும் இல்லை. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post 9-9-2025 இன்று 999 பிரபஞ்ச வசிய நாளில் பணம் தரும் பரிகாரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.