48 நாட்கள் கந்த சஷ்டி விரத வழிபாடு
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருக பெருமானுக்கு உகந்த விரத தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக தான் கந்தசஷ்டி விரதம் திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர விரதத்தையோ, கிழமை விரதத்தையோ, திதி விரதத்தையோ மேற்கொள்ள இயலாதவர்கள் கூட கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். அப்படிப்பட்ட கந்த சஷ்டி விரதத்தை 48 நாட்கள் மேற்கொள்ளக்கூடிய நபர்களும் இருக்கிறார்கள். தங்களுடைய உடல் நிலையை பொறுத்து 11 நாட்கள், 6 நாட்கள் என்று மேற்கொள்ளும் முறையும் இருக்கிறது. அந்த வகையில் 48 நாட்களும் முருகப்பெருமானை நினைத்து முருகப்பெருமானின் மந்திரத்தை தினமும் எழுதுவதன் மூலம் கந்த சஷ்டி விரதத்தை 48 நாட்கள் அனுஷ்டித்த பலனை பெற முடியும். அந்த மந்திரத்தை எப்படி எழுதுவது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கந்த சஷ்டி விரத வழிபாடு
தேவர்களை சிறையில் தள்ளி அவர்களை கொடுமைப்படுத்திய சூரசம்ஹாரனை அழித்த நாளாக தான் கந்தசஷ்டி விழா திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆறு நாட்களில் பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஒரு சிலர் 48 நாட்கள் விரதம் இருப்பது, 11 நாட்கள் விரதம் இருப்பது என்று தங்களுடைய உடல் சூழ்நிலையை பொறுத்து விரதத்தை மேற்கொள்வார்கள். 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அந்த 48 நாட்களும் விரத முறைகளை அனுஷ்டிக்க வேண்டும் அல்லவா? 48 நாட்களும் விரத முறைகளை பின்பற்ற இயலாது. ஆனால் விரதம் இருக்க ஆசையாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.
48 நாட்கள் விரதம் இருக்க நினைப்பவர்கள் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி விரதத்தை ஆரம்பித்து அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழாவோடு தங்களுடைய விரதத்தை பூர்த்தி செய்து கொள்வார்கள். அதனால் நாளைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு மாலை அணிந்தோ மாலை அணியாமலோ விரதத்தை தொடங்குவார்கள். நாமும் நம்முடைய வீட்டில் விரதம் இருக்காமல் மிகவும் எளிமையான முறையில் 48 நாட்களும் முருகப்பெருமானை ஸழிபாடு செய்யும் பொழுது விரதம் இருந்த பலனை பெறுவதோடு மட்டுமல்லாமல் நாம் முன்வைத்த வேண்டுதலும் விரைவில் நிறைவேறும்.
இந்த வழிபாட்டை காலையில் தான் செய்ய வேண்டும் மாலையில் தான் செய்ய வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. காலையில் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் மாலை 6:00 மணிக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த 48 நாட்களும் வழிபாட்டை மேற்கொள்பவர்கள் அசைவத்தை தவிர்க்க வேண்டும். சுத்தமாக இருக்கும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் முருகப்பெருமானின் மூலமந்திரத்தை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும். பிறகு அந்த பேப்பரை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மந்திரத்தை எழுதும் பொழுது முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
மறுநாள் இதே போல் இருண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து முருகனுக்கு நெய்வேத்தியம் வைத்து அதே பேப்பரில் ஒரு முறை அதே மூல மந்திரத்தை எழுத வேண்டும். பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும் பொழுது பூஜை அறையில் தீபம் ஏற்றாமல் இந்த மந்திரத்தை மட்டும் எழுதினால் போதும். ஏதாவது ஒரு நியாயமான வேண்டுதலை முன்வைத்து முருகப்பெருமானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ச்சியாக எழுதி முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.
மந்திரம்
” ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம்க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ “
இதையும் படிக்கலாமே: 9-9-2025 இன்று 999 பிரபஞ்ச வசிய நாளில் பணம் தரும் பரிகாரம்
முருகப்பெருமானை மனதார நினைத்து 48 நாட்கள் முருகனின் மந்திரத்தை பயன்படுத்தி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் விரைவில் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post 48 நாட்கள் கந்த சஷ்டி விரத வழிபாடு appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.