வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய வேண்டுதலையும் நிறைவேற்றும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
11 நாணயங்கள் வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றுதான் சந்திர பகவானுக்கு விநாயகப் பெருமான் சாப விமோசனம் அளித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று மாலை நேரத்தில் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இரவு நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இரவு நேரத்தில் சங்கடஹர சதுர்த்தி இருக்கக்கூடிய நாளில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு 11 நாணயங்களும், பச்சை நிற துணியும் இருந்தால் போதும். இரவு 11 மணிக்கு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமானின் படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து அருகம்புல் மாலையை சாற்ற வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக அகல் விளக்கில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி கிழக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். ஊதுபத்தி தூபம் காட்டி முடித்த பிறகு விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும்.
பிறகு விநாயகப் பெருமானின் மந்திரம் எது தெரியுமோ அதை கூறிக் கொண்டே பச்சை நிற துணியில் 11 நாணயங்களையும் வைக்க வேண்டும். உதாரணமாக ஓம் கம் கணபதியே நமஹ என்னும் மந்திரத்தை ஒரு முறை கூறும் பொழுதும் அந்த பச்சை நிற துணியில் ஒரு நாணயமாக வைக்க வேண்டும். 11 நாணயங்களை வைக்கும் பொழுது 11 முறை இந்த மந்திரத்தை கூறியிருப்போம். பிறகு பச்சை நிற நூலால் இதை மூட்டையாக கட்டி இதற்கு சந்தனம் குங்குமம் வைத்து விநாயகரின் பாதங்களில் வைத்து விட வேண்டும்.
பிறகு சாம்பிராணி தூபம் காட்டி விநாயகப் பெருமானை முழு மனதோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஏற்றி வைத்த தீபம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு குளிர வைத்துவிட்டு நாம் படுத்து உறங்கலாம். இந்த மூட்டையானது முழுமையாக மூன்று நாட்கள் விநாயகர் பெருமானின் பாதத்திலேயே இருக்க வேண்டும். மூன்று நாட்கள் முழுமையாக நிறைவடைந்த பிறகு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதலை திரும்பவும் விநாயகர் பெருமானிடம் கூறி வழிபாட்டை நிறைவு செய்துவிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கீழே சிந்தும் பொருட்களின் பலன்கள்
சங்கடங்களை தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை நினைத்து 11 நாணயங்களை வைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.