OPS : அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே! - மனம் திறந்த ஓ.பி.எஸ்

ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, அமித்ஷா சென்னை வந்தபோது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே. என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

OPS

NDA வில்தான் தொடர்கிறோம்!

ஓ.பி.எஸ் பேசியதாவது, நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். இப்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான். மாவட்டக் கழக நிர்வாகிகளை ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக தொண்டர்களை சந்திக்க உள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமே. அதிமுகவை ஜெயலலிதா உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டு சென்றார். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என தெரியும். ஆகவே பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு

OPS
OPS

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 9 கட்சிகளும் இணைந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எடப்பாடியை தவிர NDA வில் இருக்கும் அத்தனை தலைவர்களும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோதே நான் வாழ்த்தினேன். அவரின் அரசியலைப் பொறுத்தே அவர் எந்தத் திசையில் செல்கிறார் என சொல்ல முடியும். இதுவரை நல்ல திசையிலேயே செல்கிறார். அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.