திருஷ்டி நீங்க மரத்தடி மண்
ஒருவர் வளர்ந்து விட்டாலே மற்றவர்கள் அவர்களைப் பார்த்து பொறாமையில் வயிற்றெரிச்சல் பட்டு கொள்கிறார்கள். நாம் வளர்கிறோமோ, இல்லையோ மற்றவர்கள் வளர்ந்து விட்டால் இருப்புக் கொள்ளாது போய்விடுகிறது. இவ்வளவு பொறாமைகளுடன் நம்முடனே இருப்பவர்கள் மத்தியில், நாம் கண் திருஷ்டிகள் இல்லாமல் எப்படி இருப்பது? இத்தகைய திருஷ்டிகள் ஒழிந்து போக ஒரு கைப்பிடி அளவிற்கு இந்த மண்ணை எடுத்து வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள். வாருங்கள் என்ன செய்யணும்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்கள் எப்பொழுதும் தங்களின் வளர்ச்சியை காண முடியாமலேயே போய்விடும். மற்றவர்களின் வளர்ச்சி நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாமும் அதுபோல நம் உழைப்பால் முன்னேறுவோம் என்கிற தன்னம்பிக்கை புதிதாக பிறக்க வேண்டும். அப்படி அல்லாமல் அவர்கள் மட்டும் எப்படி இப்படி இருக்கிறார்கள்? என்று நொந்து கொள்வதில் நியாயம் இல்லை.
இப்படி மற்றவர்களின் கண் திருஷ்டிக்கு ஆளாக வேண்டி இருக்கும் வளர்ச்சி அடைந்தவர்கள் அல்லது வளர்ச்சியை நோக்கி பயணிப்பவர்கள், கண்டிப்பாக இதை செய்யுங்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஆதம விதிப்படி ஒரு ஸ்தல விருட்சம் அமைக்கப்பட்டு இருக்கும். ஸ்தலத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் விருட்சம் அக்கோவிலின் காவல் தெய்வமாகும். வன்னி மரம், வில்வமரம், துளசி, அரசமரம் என்று கோவிலின் தல விருட்சமாக இருக்கும் மரத்தடிக்கு செல்லுங்கள்.
மரத்தின் அடியில் இருக்கும் மண்ணை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னே கோவிலில் வழிபாட்டினை முடித்துக் கொள்ளுங்கள். கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொண்ட மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வையுங்கள். நம் வளர்ச்சி தடைகள் இல்லாமல் சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்பு நீங்கள் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த ஸ்தல விருட்ச மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு மூட்டை போல கட்டுங்கள். மஞ்சள் துணி இல்லாவிட்டால், வெள்ளை துணியில் மஞ்சளை நனைத்து காய வைத்து பின்னர் பயன்படுத்துங்கள்.
இந்த மூட்டையை வீட்டு வாசலுக்கு உட்புறமாக மேல்பாகத்தில் கட்ட வேண்டும். எப்பொழுதும் திருஷ்டிக்கு பயன்படுத்தும் பொருட்கள் தலைவாசலில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தான் கட்டுவார்கள். ஆனால் தல விருட்சம் மண் மிகவும் புனிதமானது. இது தீய சக்திகளை நம்மிடம் அண்ட விடாது தடுக்கும். மேலும் இப்படி பொறாமை குணம் கொண்டவர்களால் ஏற்படக்கூடிய கண் திருஷ்டிகளையும் போக்கும். இதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் கட்ட வேண்டும். அது போல விருட்ச மண்ணை எடுக்கும் பொழுது வெள்ளி அல்லது புதன்கிழமையில் எடுப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் விருட்ச மண்ணை தொடாதீர்கள்.
இதையும் படிக்கலாமே:
தல விருட்ச மண் மட்டும் அல்லாமல், உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது கோவிலில் இருக்கக்கூடிய விருட்சத்தின் அடியில் இருக்கக்கூடிய மண்ணையும் எடுத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் நல்ல பலன் தருபவையாக இருக்கும். குலதெய்வ கோவில் மண்ணை எடுத்துக் கொண்டு வந்தாலே சகல பிரச்சனைகளும் தீர்வதாக நம்பிக்கை உண்டு. இப்படி கொண்டு வரும் மண்ணை மஞ்சள் துணியில் கட்டி இதுபோல வாசலில் தொங்க விட்டால் போதும் தீய சக்திகள், கண் திருஷ்டிகள் போன்றவை நம்மை அண்டாது. அது மட்டுமல்லாமல் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற எதுவும் பலன் தராது. அவ்வளவு சக்தி நிறைந்தது இந்த ஸ்தல விருட்ச மண்ணாகும்.
The post திருஷ்டி நீங்க மரத்தடி மண் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.