தை வெள்ளிக்கிழமை சமையல் அறை வழிபாடு

இன்று தை வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் மகாலட்சுமி வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவுக்கு சமையலறையில், அன்னபூரணியின் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று மாலை பூஜையறையை சுத்தம் செய்து, மகாலட்சுமி படத்திற்கு பூக்களை போட்டு, அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி எப்படி வழிபாடு செய்கிறீர்கள்.

அதேபோல பின் சொல்ல கூடிய முறைப்படி உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த ஒரு வார்த்தையை எழுதி, சின்னதாக தூபம் காட்டி பாருங்கள். வீட்டில் ஆரோக்கியம் பெருகும். அரிசி பருப்பு, தானியத்திற்கு ஒரு போதும் குறைவு வராது. செல்வ கடாட்சம் உயர்ந்த நிலையில் இருக்கும். சமையல் அறையில் செய்யப்போகும் அந்த வழிபாட்டை பற்றிய விரிவான தகவலை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமை சமையலறை பூஜை

இன்று சமையல் அறை மேடையை சுத்தம் செய்துவிட்டு, அடுப்பை கழுவி விட்டு, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். கொஞ்சம் பச்சரிசியை ஊற வைத்து அரைத்து, சமையல் மேடையில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, “ஓம் அக்ஷயம்” என்ற வார்த்தையை எழுத வேண்டும். அந்த இடத்தில் ஒரு சின்ன பூவும் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமியும், மற்ற நல்ல தேவதைகளையும் நம் வீட்டை பார்ப்பதற்கு நம் சமையல் அறையை பார்ப்பதற்காக வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் உங்கள் வீட்டு சமையல் அறை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை இரவு மட்டும் ஆவது எச்சில் பாத்திரங்களை சிங்கிள் போட்டு வைக்காதீர்கள். சமையலறையில் அடுப்பில் மஞ்சள் குங்குமப்பொட்டு இருக்க வேண்டும். அட்சயம் என்ற வார்த்தை எழுதிருக்க வேண்டும். இந்த வார்த்தையை பார்க்க மகாலட்சுமி மனம் குளிர்வாள் என்பது நம்பிக்கை. சின்னதாக ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக சாதம் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்புக்கு பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவும் இதுபோல ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் பின்பற்றினாலே போதும். உங்கள் வீட்டில் ஐஸ்வரியும் நிலையாக தங்கி இருக்கும். அக்ஷயம் என்றால் அள்ள அள்ள குறையாதது என்று அர்த்தம்.

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத தானிய வகைகள் அரிசி பருப்பு வகைகள் இருந்தாலே போதும். வீட்டில் பணமும் நிறைவாக இருக்கும். அந்த காலத்தில் சமையலறையில் மூட்டை மூட்டையாக அரிசி பருப்பும் தானிய வகைகளும் நிறைவாக இருந்தது. அவர்களிடம் ஆரோக்கியமான வாழ்வும் இருந்தது. மனநிறைவான வாழ்க்கையும் இருந்தது. இல்லை என்ற வார்த்தை அவர்களிடம் இல்லை. அளவான பணத்தோடு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

இன்று தன தானியத்திற்கும் பஞ்சம், ஆரோக்கியத்திற்கும் பஞ்சம், மன நிம்மதிக்கும் பஞ்சம், இல்லை என்ற வார்த்தை மட்டும்தான் வீட்டில் இருக்கிறது. இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் இன்றைய தினம் மேலே சொன்ன முறையில் சமையலறையில் அன்னபூர்ணியையும் சேர்த்து மனம் உருகி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் சுபிட்சம் நிலவும். வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் அடிப்படையை சுத்தம் செய்து அக்ஷயம் என்ற வார்த்தையை எழுதி பூஜைக்கு தயார் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார தடை நீங்க செல்வநிலை உயர வழிபாடு

மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி, பூஜை செய்யும் போது, சமையல் அறையில் கட்டாயம் தீப தூப கற்பூர ஆராதனையும் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்படி சமையலறைக்குள் நெருப்பை எடுத்துச் செல்லும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டரை கீழே ஆஃப் செய்து விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து உங்களுடைய சமையலை நீங்கள் துவங்கிக் கொள்ளலாம். இவ்வளவுதான். இந்த எளிமையான வழிபாடு வீட்டில் இருக்கும் வறுமையை சுத்தமாக நீக்கிவிடும் நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெரலாம்.

The post தை வெள்ளிக்கிழமை சமையல் அறை வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.