தை வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை
எங்கள் வீட்டில் சுபகாரியை தடை இருக்கிறது, வீட்டில் எப்போதும் கடன் பிரச்சனை, வீட்டு பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் எப்போதும் சண்டை சச்சரவு. உடல் ஆரோக்கிய நலனில் பிரச்சனை. குடும்பத்தில் சந்தோஷமே இல்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்களோ, நாளை வரக்கூடிய தை வெள்ளிக்கிழமை கட்டாயம் இந்த குங்கும அர்ச்சனையை வீட்டில் செய்து விடுங்கள். உங்களை பிடித்த பீடை தரித்திரம் எல்லாம் நாளைய தினத்தோடு உங்களை விட்டு விலகும்.
ஒரு சில ஊர்களில், ஒரு சில கோவில்களில் தை வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை செய்யப்படும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும், குத்து விளக்கை கொண்டு வந்து அதை வாழை இலையில் வைத்து, 108 மந்திரத்தை குருக்கள் சொல்ல சொல்ல, நாம் அந்த விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்யலாம். இப்படி ஒரு வழக்கம் உங்கள் வீட்டு பக்கத்தில் ஏதேனும் கோயிலில் இருந்தால், அந்த விளக்கு பூஜையில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். இந்த விளக்கு பூஜையை செய்பவர்கள் வீடு சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை.
தை வெள்ளி வீட்டில் செய்ய வேண்டிய குங்கும அர்ச்சனை
அடுத்தபடியாக தை வெள்ளி கிழமையில், வீட்டில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான குங்கும அர்ச்சனை உள்ளது. உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த அர்ச்சனையை செய்யலாம். காமாட்சியம்மன் விளக்குக்கு இந்த அர்ச்சனையை செய்யலாம். சில பேர் வீடுகளில் கலசம் நிறுத்தி அந்த கலசத்தை மகாலட்சுமி போல அலங்காரம் செய்து, அதற்கு அர்ச்சனை செய்வார்கள்.
சில பேர் குத்துவிளக்கை மகாலட்சுமி போல அலங்காரம் செய்து, அதற்கு குங்கும அர்ச்சனை செய்வார்கள். இவ்வளவு தூரம் உங்களால் வேலை செய்ய முடியாது என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு மல்லிகைப் பூ வைத்து மகாலட்சுமியின் பாதத்தில் ஒரு வெற்றிலை வைத்து விடுங்கள். மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஏதாவது ஒரு பாடலை வீட்டில் ஒலிக்க விடுங்கள்.
அந்த பாடல் பாடும் போதே உங்கள் மனதிற்குள் “மகாலட்சுமி தாயே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி குங்குமத்தை எடுத்து அந்த வெற்றிலையில் போட்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நல்ல தாழம்பூ குங்குமம் வாங்கி, இந்த அர்ச்சனை செய்து, இந்த குங்குமத்தை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு, தினமும் நெற்றியில் இட்டு வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை கஷ்டமும் விலகும்.
வீட்டில் யார் மூத்தவர்களாக இருக்கிறார்களோ, அந்த பெண்ணின் கையால் இந்த கொங்கும அர்ச்சனையை செய்யலாம். குடும்ப தலைவிகள் இந்த குங்கும அர்ச்சனையை செய்யலாம். உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளையும் இந்த குங்குமரசனையை செய்ய சொல்லலாம்.
இப்படி அர்ச்சனை செய்த குங்குமத்தை உங்கள் சொந்த பந்தங்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம் தவறு கிடையாது. குங்குமத்தை பெண்களுக்கு கொடுக்கும்போது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக செய்யும். வாய்ப்பு உள்ளவர்கள் நாளை வரக்கூடிய தை வெள்ளிக்கிழமையில், இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கனவை நினைவாக்கும் வாஸ்து தீப வழிபாடு
நாளைய தினம் வாய்ப்பு இல்லாதவர்கள், அடுத்தடுத்து வரக்கூடிய ஏதாவது ஒரு தை வெள்ளிக்கிழமை இந்த அர்ச்சனையை உங்கள் வீட்டில் செய்து விடுங்கள். நிச்சயம் அத்தனை கஷ்டங்களும் வீட்டிலிருந்து விலகும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்
The post தை வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.