காரியசித்தி தரும் மந்திரம்
காரிய சித்தி மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேருக்கு வாழ்க்கையில் தோல்வி மட்டும் தான் தொடர்ச்சியாக வரும். வெற்றி என்பதை அவர்கள் கனவிலும் பார்த்திருக்க மாட்டார்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறதா.
தினமும் எழுந்து பூஜை அறையில் அமர்ந்து இந்த காரியசித்தி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்துவிட்டு, முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். பிறகு வெற்றி உங்கள் பின்னால் வரும். தோல்வி உங்களை கண்டு துவண்டு போகும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
காரிய சித்தி மந்திரம்
ஓம் அனுகிரஹ தாரா தேவி
காரியசித்தி தேவதா
ஜெய தேவதா
அனுகிரகம் குரு குரு.
இந்த மந்திரத்தை ஒரே ஒரு நாள், 108 முறை உச்சரித்துவிட்டு, எனக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை உச்சரித்து வாருங்கள். மந்திரம் 10,000 முறை உச்சரிக்கப்படும் போது, 20,000 முறை உச்சரிக்கப்படும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடியது அபரிவிதமான வெற்றியாக இருக்கும். எல்லா மந்திரத்திற்கும் ஒரு தன்மை உண்டு.
ஆனால் அந்தத் தன்மையை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், தினம் தினம் ஒரே ஒரு மந்திரத்தை எடுத்து உச்சரிக்க துவங்க வேண்டும். அந்த மந்திரம் நமக்கு சித்தியாக வேண்டும் அந்த மந்திரம் சித்தி ஆகிவிட்டால், அந்த மந்திரத்தை சொல்லி என்ன வேண்டினாலும் அது நமக்கு உடனே கிடைக்கும். இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லுபவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும்.
தடைகளாக இருக்கக்கூடிய காரியங்கள் வெற்றி அடையும். சோர்வாக இருப்பவர்கள், சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து, நீண்ட நாட்களாக வாங்க முடியாத சொத்து, இதுபோல ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
இவன் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன். இவனுக்கு ஒரு நல்லதுமே இனி வாழ்க்கையில் நடக்கவில்லை என்று, சில பேரை ஒதுக்கி வைப்போம். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் தினமும் இந்த மந்திரத்தை சொன்னால், அவர்கள் அதிர்ஷ்டமானவர்களாக மாறுவார்கள். இந்த மந்திரத்தை உச்சரித்த வாயால் என்ன சொன்னாலும் அது உடனடியாக பலிக்கும். அதற்காக அடுத்தவர்களுக்கு சாபம் விடக்கூடாது. நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே சொல்ல வேண்டும்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே பிரச்சினை. இந்த குடும்பமே துரதிஷ்டம் வாய்ந்த குடும்பம். இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கு கூட ஒரு நல்லதும் இதுவரை நடந்ததில்லை என்று சொல்லுவார்கள் எல்லாம் தினமும் காலையில் எழுந்து குடும்பத்தோடு அமர்ந்து குலதெய்வத்தை மனதில் நிறுத்தி பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை குடும்பத்தோடு சொல்லிப் பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: கொசுவை விரட்டும் பேய்மிரட்டி
உங்கள் குடும்பம் சீரும் செழிப்புமாக உயர்ந்த நிலைக்குச் செல்லும். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த மந்திரத்தை நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்று உச்சரிக்கும் உங்களுக்க, நிச்சயம் ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
The post காரியசித்தி தரும் மந்திரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.