Vj Dhanusek: இப்ப தாங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம் - நீ நான் காதல் தனுஷிக் ஷேரிங்ஸ்
இலங்கையிலிருந்து மீடியா கனவை நிறைவேற்றச் சென்னைக்கு வந்தவர் விஜே தனுஷிக். தொகுப்பாளராக வர வேண்டும் என ஆசைப்பட்டவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `நீ நான் காதல் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
"ஆக்டிங் விட இங்க ஆங்கரிங்கிற்குத்தான் பெரிய போட்டி இருக்கு. ஒரு பிரபல சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கேட்டு போனப்ப என்கிட்ட, `நீங்க குண்டா இருக்கீங்க... அதனால பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வாங்கனு சொன்னாங்க. இது மாதிரி பல விஷயங்களை நான் எதிர்கொண்டிருக்கேன். ஒவ்வொரு முறை ஆடிஷனுக்குப் போறப்ப இது மாதிரியான விஷயங்களை எல்லாம் கடந்து தான் வந்திருக்கேன். இப்பவும் யாராச்சும் ஆங்கரிங் பண்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொன்னா முதல் ஆளாக ஓடிப் போயிடுவேன். சின்ன சின்ன கேரக்டர் ரோல் பண்ணிட்டிருந்தேன். இப்ப முக்கிய கேரக்டரில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை சந்தோஷமா பண்ணிட்டிருக்கேன்" எனக் கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் (நவம்பர் 27), தனுஷிக்கிற்கும் மணி என்பவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இது குறித்து தனுஷிக்கிடம் கேட்டபோது, "இது பக்கா அரேஞ்சிடு மேரேஜ். இப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு அதனால இப்ப தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். அவர் பிசினஸ் பண்றார்" என்றார்.
தவிர தனுஷிக் அவரது பர்சனல், புரொபஷனல் லைஃப் குறித்தும் பல விஷயங்களை நம்மிடையே வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/Neerathikaaram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.